இனிய இரவு தமிழ் கவிதை – Good Night Quotes in Tamil 2024

5/5 - (1 vote)

 ira

 

  • Good Night Kavithai Whatsapp
  • Good Night Quotes for Girl Friend Tamil
  • Iravu Vanakkam Kavithai
  • Whatsapp Good night tamil

 

ஓய்வு இல்லாமல் உற்சாகமாக
இலக்கை நோக்கி பயணிக்க இயலாது
நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது
இனிய இரவு வணக்கம்


பகல் முழுவதும்
இமைத்து இமைத்து
களைத்து போன
இமைகளுக்கும்
சிறிது ஓய்வு கொடுப்போம்


உலகிற்கு ஒளி தரும் சூரியனே
உறங்கசென்று விட்டது
என் உயிருக்கு ஒளி தரும்
நீ மட்டும் ஏன் விழித்திருக்கிறாய்
போய் கண் உறங்கு


நிலவை பார்க்கும் போது
நீ தூரமாய் இருப்பதாய் உணர்கிறேன்
என் நிழலை பார்க்கும் போது
நீ என்னோடு இருப்பதை உணர்கிறேன்
இனிய இரவு வணக்கம்


இரவு என்பது வரமாக
உறக்கம் என்பது நலமாக
நாளைய பொழுது சுகமாக அமைய
அன்பான இரவு வணக்கம்


இரவு வணக்கத்தோடு கொஞ்சம் அன்பையும்
பாசத்தையும் நேசத்தையும் கலந்து அனுப்புகிறேன்
அன்பான உள்ளத்திற்கு


Good Night Tamil Kavithai


விடியும் என விண்ணை நம்பு
முடியும் என உன்னை நம்பு
இனிய இரவு வணக்கம்


உறங்கும் இரவு இனிமையாகட்டும்
விழிக்கும் விடியல்
மகிழ்ச்சியானதாக அமையட்டும்


வாழ்க்கையில் நமக்கு ஏற்படும்
கசப்பான சம்பவங்கள் தான்
நமக்கு நல்ல பாடங்களையும்
நல்ல அறிவுரைகளையும்
வழங்கி விட்டு செல்லும்


உறங்கும் அவளின் விழிகளுக்குள்
உறங்காது உயிர்த்திருக்கும் எனது
நினைவுகள்

Ravi Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *