அண்ணா தங்கச்சி தமிழில் மேற்கோள்கள் – Anna Thangachi Quotes in Tamil

5/5 - (1 vote)
Anna Thangachi quotes in Tamil” beautifully express the deep bond between brothers and sisters. These heartfelt lines, including thangachi kavithai in Tamil and anna kavithai in Tamil, capture emotions like love, care, and support. Whether you’re looking for emotional brother and sister quotes in Tamilsister kavithai in Tamil, or brother quotes in Tamil, these sentiments reflect the unique connection. From feeling brother and sister quotes in Tamil to sentiment brother and sister kavithai in Tamil, each quote showcases the timeless love shared by annan thangai.

  • anna thangachi quotes in tamil
  • thangachi kavithai in tamil
  • anna kavithai in tamil
  • emotional brother and sister quotes in tamil
  • sister kavithai in tamil
  • brother quotes in tamil
  • sister quotes in tamil
  • feeling brother and sister quotes in tamil
  • brother and sister quotes in tamil
  • annan thangai quotes in tamil
  • sentiment brother and sister kavithai in tamil
தங்கை தன் அண்ணனை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டாள்..!

தங்கைக்கு வாழ்க்கை
அமையும் வரை தன்
வாழ்க்கையை பற்றி
நினைக்க மாட்டான்
அண்ணன்..!

தங்கை உள்ளவனுக்கு
தங்க தங்கமாளிகை
தேவையில்லை..
தங்கை உள்ளமே
தங்கமாளிகை தான்..!

வலிக்காமல் குட்டுவது
எப்படி என்பது தங்கைகளுக்கு
மட்டுமே தெரியும்.. அது போல
வலித்தது போல் நடிக்க
அண்ணன்களால்
மட்டுமே முடியும்..!

கையில் மருதாணி வைத்து
அவசரமாய் என்னிடம்
ஓடி வரும் போது ஓர்
உலக அதிசயமாய்
என் தங்கை..!

தங்கையின் வாழ்க்கைக்காக
தன் வாழ்க்கையை கூட
தியாகம் செய்பவன்
அண்ணன் மட்டும் தான்..!

விடுமுறை தினங்களில்
சைக்கிள் ஓட்ட
கற்றுத்தருவாய் முயற்சித்து
மணலில் நான் விழுகையில்
மாரோடு அணைக்கும்
தாயும் நீயே அண்ணா..!

அண்ணன் தங்கை
எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் அடுத்த
நொடியே இருவரும்
பேசிக் கொள்வார்கள்..
அது தான் உடன்
பிறந்த பாசம்..!

தன் தங்கைக்காக எந்த
சூழ்நிலையையும் தாங்கி
கொள்பவன் அண்ணன்
மட்டுமே..!

அண்ணன் தங்கை உறவு
என்பது வெறும் கையில்
கட்டும் கயிற்றில் வாழ்வதில்லை..
அது இதயத்தில் வாழ்வது..!

எந்த செயலையும் துணிந்து
செய்வான் தன்
தங்கைக்காக அண்ணன்..!

எத்தனை முறை அம்மா
திட்டினாலும் ஓய்வதே
இல்லை அண்ணன்
தங்கை சண்டை..!

தன் உயிர் உள்ளவரை
அண்ணனிடம் அன்பும் பாசமும்
காட்டுபவள் தங்கை..!

தங்கை அண்ணன் மீது
காட்டும் அதிகபட்ச பாசம்
சண்டையாக தான் இருக்கும்..!

மலர்களோடு மலராக
பூத்திருக்கும் ரோஜாவே
தங்கை.. உன்னைக்
காப்பதற்கு முள்ளாக
நானிருப்பேன்..!

என்றுமே மாறாத அன்பு
என் அன்புத் தங்கையே
உனக்கு மட்டுமே என்றுமே
இந்த அண்ணன் உனக்கு
கொடுப்பேன்..!

தங்கை என்றும் அண்ணனுக்கு
விலை மதிக்க முடியாத
பொக்கிஷம்..!

அண்ணன் எது வாங்கிக்
கொடுத்தாலும் தங்கை
குறை சொல்லாமல்
இருக்க மாட்டா.. ஆனா
எல்லோரிடமும் இது என்
அண்ணன் வாங்கித் தந்தது
என்று பெருமையாக
சொல்லுவாள்..!

வாசித்த கவிதைகளில்
யோசிக்க வைத்த வரி அண்ணா…
சுவாசித்த இதயங்களில் நேசிக்க
வைத்த வரி தங்கை..!

தன் தங்கைக்காக எல்லோரையும்
எதிர்த்து நின்று போராடுபவன்
அண்ணன் மட்டும் தான்..!

உடல் முழுதும் இரத்தம் வந்தாலும்
அதையும் தாங்கிக் கொண்டு
தன் தங்கைக்காக உழைப்பவன்
தான் அண்ணன்..!

எனக்கு இன்னொரு தாய் தந்தை
என் அண்ணனே என்று
கூறுவாள் தங்கை..!
Ravi Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *