Akka Thangachi quotes in Tamil highlight the deep and loving bond between sisters, celebrating their friendship, support, and shared memories. These quotes reflect the playful yet caring relationship that strengthens over time. Perfect for social media, greeting cards, or personal messages, they beautifully express the unbreakable connection between sisters.
akka thangachi quotes in tamil
ஆயிரம் சண்டை வந்தாலும்
அக்கா என்ற ஒரு உறவை
விட்டு விடாதே அவள் உன்
தாய்க்கு நிகரானவள்..!
akka thangai kavithai in tamil
தலைக்கு மேல் வளர்ந்த
தங்கையை இன்னும்
குழந்தை போல பார்த்துக் கொள்ளும்
இன்னொரு தாய்
அக்கா மட்டும் தான்..!
sister kavithai in tamil
என் பாசமிகு அக்கா
என் ஆசை எல்லாம் ஒன்று தான்..
மறு ஜென்மம் எடுத்தாலும்
நீயே எனக்கு அக்காவாக
வர வேண்டும்..!
எனக்கு கிடைத்த மிகப் பெரிய
பொக்கிஷம் நீ தான்
என் அன்பு அக்கா.. நீ என்
அருகில் இல்லையென்றாலும்
உன்னை நினைக்காத
நாள் இல்லை..!
0ஒருவருடைய கண்களில் இருந்து
கண்ணீர் வரும் போது
இன்னொருவருடைய கண்களில்
இருந்தும் கண்ணீர் வந்தால்
அந்த உறவை விட இந்த உலகத்தில்
பெரிய உறவு ஏதும் இல்லை..!
two sisters quotes in tamil
அக்கா..!
நீ இருந்த கருவறையில்
நான் இருந்து உதைத்தது
அம்மாவை நோகடிக்க அல்ல..
நீ எனக்கு முன்பு பிறந்திருந்தால்
உன் முகம் பார்க்காவே..!
அக்கா…
பள்ளியில் என்னை சேர்க்கும் போது
நான் அழுதது பயத்தினால் அல்ல..
உன் பாசத்தை பிரிகிறேனோ
என்ற பயத்தினால்..!
அக்கா.. இளமையில் நான் அழுதது
காதலில் கலங்கி அல்ல..
கல்யாணம் உன்னிடத்தில் இருந்து
என்னை பிரிக்குமோ
என்ற பயத்தினால்..!
என் அக்கா.. நீ அருகில் இருக்கும் வரை
எதுவும் தெரியவில்லை.. ஆனால்
இன்றோ உணர்கிறேன்.. என் வாழ்வின்
மொத்த வண்ணங்களும் நீ என்று..!
thangachi in tamil
எனது தாயாக.. என் தோழியாக..
என் அக்காவாக இருந்தும்..
என் வாழ்வின் கடைசி நொடியும்
உன் மடியில் முடிய வேண்டும் அக்கா..!
மரியாதை கொடுத்தது இல்லை..
மதிச்சும் நடந்ததில்லை..
மதிக்காத போதும் என்னை
மதிக்க அவள் நினைத்ததில்லை..
எனக்கு அவதான் பந்தம்..
அவள விட்டா ஏது சொந்தம்..!
அடிக்கு அடிதான்
உதைக்கு உதைதான்
இது தான் எங்களின் பாசம்..
அடித்தாலும் உதைத்தாலும்
என்னை யாரிடமும்
விட்டு கொடுத்ததில்லை.. மருதாணி
அரைச்சாலும் என்னை விட்டுட்டு
வச்சதுமில்லை.. என்னுடன்
பிறந்த பிறப்பு எனக்கு அவதான்
உடன்பிறப்பு..!
இரண்டாம் தாயாக என் வாழ்வில்
வந்து இருள்படாது என்னை
காத்தால்.. அவளிடத்தில் பாசத்துக்கு
பஞ்சமில்லை.. அக்கானு
அழைத்ததுண்டு அம்மானு
அழைத்ததில்லை ஆனாலும்
இரண்டு நிலையிலும் என்னை
அரவணைக்க அவள்
மறந்ததே இல்லை..!
இவளை போல ஒரு தாயும் இல்லை..
இவள் அன்பு என்றும்
குறைந்ததில்லை பிரிந்து சென்றாலும்
என்னை அவள் மறந்ததில்லை..
உலகமே அலைந்து திரிந்தாலும்
இவளைபோல யாரும் என்னை
நேசித்ததில்லை.. உயிரை போல்
என்னை நீயும் சுவாசித்தால்
உனக்கு நிகர் யாரும் இல்லை
அக்கா..!
மேலும் கவிதைகள் உங்களுக்காக
- இனிய காதலர் தின வாழ்த்துக்கள் | 100+ Valentine’s Day Quotes, Kavithai & Wishes in Tamil - February 11, 2025
- தமிழில் குடியரசு தின கவிதை – Republic Day Kavithai in Tamil 2025 - January 25, 2025
- தமிழில் மழை கவிதை – Rain Kavithai in Tamil - January 18, 2025