Republic Day Kavitha in Tamil celebrates the spirit of patriotism and unity with powerful verses that resonate deeply. These kavithaigal honor India’s rich heritage, sacrifice, and progress, inspiring pride in every heart. Dive into meaningful Tamil poetry that encapsulates the essence of freedom and ignites a sense of national pride.
Copy & Paste Republic Day Kavithai in Tamil
அடிமைத்தனம் தீர்ந்த தினம்
அரசு அமைந்த தினம்
சுதந்திரம் பெற்று வளர்ந்த தினம்
இது குடியரசு தினம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
சமத்துவம் தொடர்ந்து
சம உரிமை நீடித்து
பாரதம் செழித்து
மக்கள் வாழ்வு சிறக்க
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
தாய் மீதான பாசம்
போன்றதே தாய் நாட்டின்
மீதான பாசமும்
தாயை நேசிப்போம்
தாய் நாட்டை
மூச்சாய் சுவாசிப்போம்
வந்தே மாதரம்!
குடியரசு தின வாழ்த்துக்கள்
எத்தனை மதம்
எத்தனை மொழி
இருந்தாலும் நாம்
அனைவரும் பாரதத்
தாயின் பிள்ளைகள் தான்
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
தேசத்தின் சகோதரத்துவமும்
சமத்துவமும் மேம்படட்டும்
குடியரசு தின வாழ்த்துக்கள்
ஜனநாயகம் மலர்ந்த
இந்நன்னாளில் அனைவருக்கும்
குடியரசு தின வாழ்த்துக்கள்
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ்நாடு
என்று சொல்லடா என் நாமம்
இந்தியன் என்றே என்றும் நில்லடா
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
Republic Day Quotes in Tamil
அமைதியும் அன்பும் நிறைந்து
வழியட்டும் நம் தேசத்தில்
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
அனைவரும் இணைந்து
நாட்டின் பலமாய் இருந்து
வளர்ச்சியை நோக்கி
முன்னேற உழைப்போம்
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
எண்ணங்களில் சுதந்திரமும்
வார்த்தைகளில் உண்மையும்
இதயத்தில் அமைதியும்
நினைவுகளில் சரித்திரமும்
நிறைந்திருக்கும் இத்தருணத்தில்
தாய் மண்ணே உனை வணங்குகிறேன்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
எத்தனை கோபம்
எத்தனை வருத்தம்
எத்தனை இருப்பினும்
நாடு நம் நாடு என்பது
மட்டும் மாறாத உணர்வாய்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசை போற்றுவோம்
நம் தேசியக்
கொடியினை ஏற்றுவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
அடிமைப்பட்டு போன தாய் நாட்டை
தன் உயிரை துச்சம் என எண்ணி
போராடி சுதந்திரத்தை பெற்று தந்த
தலைவர்களையும் வீரர்களையும்
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும்
தினம் தான் குடியரசு தினம்
குடியரசு தின வாழ்த்துக்கள்
இந்தியன் என்பது
நம் பெருமை
வேற்றுமையில் ஒற்றுமை
என்பது நம் மகிகை
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
Kudiyarasu Dhinam Kavithai in Tamil
நம்மை பிரிந்து சிறுமை
படுத்தும் தீய சக்திகளை
வேரருத்து இந்தியன் என்று
பெருமை கொள்வோம்
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
மறுக்கவும் முடியாது
மறக்கவும் முடியாது
மறைக்கவும் முடியாது
உங்கள் வீரமும் தியாகமும்
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
சுதந்திரம் பெற்றது
போராளிகளின் மகத்துவம்
அதை சமத்துவத்துடன்
பேணி காப்பதே
நம் தனித்தும்
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
உயர்வு தாழ்வு எங்களில்
இல்லை உலகம் போற்ற
பாரதம் சிறக்க மனிதத்துடன்
வாழ பிறந்த பாரதத்தாய்
பிள்ளைகள் நாங்கள்
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
நம் தேச செழுமைக்காக
தேசிய மக்கள் வளமைக்காக
நம்மால் இயன்றதை செய்வோம்
என்று உறுதிமொழி எடுப்போம்
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
சுதந்திரத்தை பெற்றுத் தந்த
சரித்திர நாயகர்களுக்கு
ஆயிரம் ஆயிரம்
நன்றிகளும் வணக்கங்களும்
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
பண்பட்ட பாரத நாட்டில்
வாழ்வது அருமை
பண்பாட்டை சொல்லித்தந்த
தமிழர்நாட்டில் வாழ்வது பெருமை
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
Republic Day Wishes in Tamil
சகோதரத்துவம் சமத்துவம்
அதுவே எங்கள் மகத்துவம்
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
நாடு எனக்கு என்ன செய்தது
என்று சிந்திப்பதை விட
நாட்டுக்கு நாம் என்ன
செய்தோம் என்று சிந்தித்து
செயல்படுத்துவது சிறப்பு
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
அமைதியும் அன்பும்
நம் நாட்டில் பெருகட்டும்
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
இந்தியனாய் ஒன்றாக நின்று
நாட்டின் பலமாய் இருந்து
வளர்ச்சியை நோக்கி
முன்னேற உழைப்போம்
குடியரசு தின வாழ்த்துக்கள்
நாட்டுப்பண் பாடியதும்
உடல் நரம்புகள்
புடைப்பதல்ல தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள்
களைய நாம் நாளும்
உழைப்பதே தேசபக்தி
குடியரசு தின வாழ்த்துக்கள்
பாரதமாதா படத்தினை
வைத்து குனிந்து பணிவது
மட்டுமல்ல தேசபக்தி
உயர் பட்டம் பெற்றும்
பலநாட்டில் வசியாமல்
நம் பாரத மக்களுக்கு
பணியாற்றுவதே தேசபக்தி
குடியரசு தின வாழ்த்துக்கள்
தியாகிகள் பெருமை நினைந்து
தினம் பேசுவது மட்டுமல்ல
தேசபக்தி தனித் திறமையதை
வளர்த்து உலகில் நம் தேசத்தின்
புகழ் உயர்த்துவதே தேசபக்தி
குடியரசு தின வாழ்த்துகள்
இந்தியா என் தாய்நாடென்று
வெறுமனே இயம்புவது
மட்டுமல்ல தேசபக்தி
நம் இன ஒற்றுமை
இயற்கைவளம் சீரழியாமல்
இதயம் வைத்து
காப்பதே தேசபக்தி
குடியரசு தின வாழ்த்துகள்
மேலும் கவிதைகள் உங்களுக்காக
அக்கா தங்கச்சி தமிழில் மேற்கோள்கள்
அக்கா தம்பி தமிழில் மேற்கோள்கள்
- தமிழில் குடியரசு தின கவிதை – Republic Day Kavithai in Tamil 2025 - January 25, 2025
- தமிழில் மழை கவிதை – Rain Kavithai in Tamil - January 18, 2025
- தமிழில் திருமணம் கவிதை – Marriage Kavithai in Tamil 2025 - December 28, 2024