விவேகானந்தர் தமிழில் மேற்கோள் காட்டுகிறார் – Vivekananda Quotes in Tamil

5/5 - (1 vote)

Swami Vivekananda’s quotes in Tamil are a source of inspiration and wisdom for people of all ages. From motivational Vivekananda quotes in Tamil to the golden words of Swami Vivekananda in Tamil, his teachings encourage positivity and self-confidence. Explore Vivekananda quotes in Tamil for studentsVivekanandar ponmoligal in Tamil, and Vivekananda Tamil ponmozhigal to find thoughts that uplift and guide.

  • vivekananda quotes in tamil
  • motivational vivekananda quotes in tamil
  • golden words of swami vivekananda in tamil
  • swami vivekananda quotes in tamil
  • vivekananda quotes in tamil for students
  • vivekanandar ponmoligal in tamil
  • vivekananda thoughts in tamil
  • vivekananda tamil ponmozhigal

பொய் சொல்லித் தப்பிக்காதே; உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது


இதயம் சொல்வதைச் செய்
வெற்றியோ
தோல்வியோ
அதைத்
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு


நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.


உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.


பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.


அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.


நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு


உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.


உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.


நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது


வெற்றிகளை சந்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது


எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.


 

தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.


 

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.


சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.


வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.


உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.


எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.


 

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)


சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.


தீண்டாமையைத் தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதையே தெய்வமாகக் கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.


செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.


 

பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.


தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.


கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

மேலும் கவிதைகள் உங்களுக்காக

தமிழில் நிலா கவிதை

அக்கா தம்பி தமிழில் மேற்கோள்கள்

தமிழில் பைபிள் வசனங்களை ஆசீர்வதித்தல்

Ravi Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *