தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் – Pongal Wishes in Tamil 2024

4.2/5 - (4 votes)

Celebrating pongal wishes in tamil 2024 , a festival honoring cattle, is a time of joy and tradition. Sharing “whatsapp pongal wishes in tamil” like “happy Pongal wishes in Tamil” and “Pongal Tamil Messages” brings warmth to the occasion. These heartfelt “Pongal Whatsapp messages” and “Pongal kavithai in Tamil” , pongal quotes in tamil words enrich the festive spirit.

  • pongal wishes in tamil
  • pongal wishes in tamil words
  • new pongal wishes in tamil
  • happy pongal wishes in tamil
  • Happy Pongal 2025
  • Pongal Tamil Messages
  • Pongal Whatsapp messages
  • Pongal wishes in tamil fonts

 


உழவனுக்கு மட்டும் அல்ல
ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு
பிறகு உலகுக்கே நீ
செல்லப்பிள்ளை தான்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


தாய் கூட சில மாதங்கள்
தான் எனக்கு பால் ஊட்டினாள்
ஆனால் நான் இருக்கும் வரை
எனக்கு பால் கொடுக்கும் நீ
என் தாயினும் சிறந்தவள்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


கலைப்பறியாது உழைக்கும்
உனக்கு தலை வணங்கி
நன்றி கூறுகிறேன்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

Pongal Wishes in Tamil


மாடுகளின் அழகினை
கவிதையில் வர்ணிக்கலாம்
ஆனால் உழைப்பை
வர்ணிக்க ஓராயிரம்
கவிதை போதாது
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


மண் வாசனையோடு
ஏர் கலப்பைகளை சுமந்து
நாம் இன்பமாய் உணவுண்ண
விவசாயிக்கு தோள் கொடுக்கும்
எருதுகளை போற்றுவோம்
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


விவசாயத்தின் தோழனாய்
உழவனின் தொண்டனாய்
வீரத்தின் அடையாளமாய்
விளங்கும் மாடுகளுக்கு
நன்றி செலுத்துவோம்
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


Mattu Pongal Wishes in Tamil


எண்சாண் உடலின் ஒரு சாண்
வயிற்றுக்கு தடையின்றி
உணவு கொடுத்த உழவுக்கும்
உழவுக்கு உதவிய மாட்டுக்கும்
நன்றி சொல்லும் திருநாள்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


அன்பின் ஒவ்வொரு நிறமும்
உங்கள் வீட்டையும் இதயத்தையும்
நிறைய மகிழ்ச்சியுடன் நிரப்பட்டும்
அனைவருக்கும் இனிய
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மாட்டுப் பொங்கல் கடவுளுக்கு
நன்றி செலுத்துவதற்கும்
பிரார்த்தனை செய்வதற்கும்
ஏற்ற நாள் ஆகும்
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


இது உழவர்களின் தோழனை
கொண்டாடும் திருநாள்
அனைவருக்கும் இனிய
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


நம் பாரம்பரியமான விலங்குகளான
மாடுகளை போற்றிப் பாதுகாப்பது
பாரத தேசத்தில் பிறந்த
ஒவ்வொருவரின் கடமையாகும்
இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


சாதி மத பேதமின்று அணைத்து
மதங்களை சார்ந்தவர்களும்
கொண்டாடும் ஒரு அற்புத
திருநாளே பொங்கல்
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


மாட்டுப் பொங்கல் பண்டிகையை
கண்கவர் ஆடை அணிந்து
வீட்டை அலங்கரித்து விருந்து
படைத்து கொண்டாடுங்கள்
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


தமிழர்களின் வீரம் போற்றுகின்ற
ஜல்லிக்கட்டு தமிழா வீரத்தால்
அதை நீ வென்று காட்டு
இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


சிங்கத்தை போல் சீறி
வரும் காளையினை சிங்கமென
பாய்ந்து அடக்குகின்ற
காளையர்களுக்கு மாட்டுப்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


Mattu Pongal Wishes in Tamil


வீரத்தின் அடையாளமாய்
விவசாயத்தின் தோழனாய்
ஏழைகளின் தெய்வமாய்
உழவனின் தொண்டனாய்
விளங்கும் பசு மற்றும் மாட்டின்
பண்டிகையாம் மாட்டு பொங்கல்
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மனிதனுக்கு பால் கொடுத்து
மனிதனுக்கு தோள் கொடுத்து
இல்லை இல்லை மனிதனுக்கு
தன்னையே கொடுத்து
மாண்டு போவது மாடு
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


 

தனித்த மௌனங்கள்
உழவன் நண்பனுக்கு
கவிதையால் ஒரு மரியாதை
பொங்கலோ பொங்கல்!


உழைத்து களைத்த உழவர்களுக்கு
ஒருநாள் உழவர் திருநாள்
உழைத்து களைத்த உனக்கும்
ஒரு நாள் மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உழவனின் பிரியமான
தோழனுக்கு பொங்கல்
பொங்கலோ பொங்கல்!
மாட்டு பொங்கல்!!


தாய்ப்பால் அருந்தாமல்
வளர்ந்தவர் பலர்
பசும் பால் அருந்தாமல்
வளர்ந்தவர் இலர்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


வீரம் போற்றும் ஜல்லிக்கட்டு
தமிழா அதை நீ வென்று காட்டு
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்


தித்திக்கும் தமிழ் போல
பொங்கட்டும் பொங்கலது
புதுப்பானை பொங்கல் போல
பிறக்கட்டும் புதுவாழ்வு
திகட்டாத கரும்பு போல
இனிக்கட்டும் மனிதனின் மனது
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உலகத் தமிழினம்
உற்சாகத் துள்ளலுடன்
உறவுடன் ஒன்றுபட்டு
தமிழர்களின் தைத்திருநாளை
கொண்டாட வாழ்த்துக்கள்


புன்னகை பூக்கட்டும்
ஆனந்தம் பொங்கட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மங்களம் பொங்கட்டும்
மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்
எண்ணியது ஈடேற
தமிழர் திருநாள்
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்


வெண் பொங்கலின் சுவையும்
சர்க்கரை பொங்கலின் இனிமையும்
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை
தரட்டும் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


செவ்விதழ் திறந்து
செந்தமிழ் பேசும்
செந்தமிழ் உறவுகளுக்கு
தை பொங்கல் வாழ்த்துக்கள்


மழைக்கும் மண்ணுக்கும்
உழுது, விதைத்து, உணவை
கொடுக்கும் உழவனுக்கும்
சிறு உயிர் உட்பட உழவனுக்கு
உதவிய அனைவருக்கும் இந்த
நல்ல நாளில் நன்றிகள்
தை பொங்கல் வாழ்த்துக்கள்


இல்லங்களில் பொங்கல் பொங்கிட
உள்ளங்களில் ஆனந்தம் பொங்கிட
உங்களுக்கு என் உள்ளம் பொங்கும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்


காலம் பல மாறினாலும்
ஆட்சிகள் பல வந்தாலும்
காட்சிகள் பல தந்தாலும்
சாட்சி சொல்லி நிற்கும்
ஓர் நாள் அது என்றும் மாறாத
எம் தமிழர் திருநாளாம்
பொங்கல் திருநாள்


மண் காத்து மலை காத்து
உழவையும் உழவனையும் காத்து
பொங்கலிட்டு புன்னகை
பொங்க கொண்டாடிடுவோம்
தை பொங்கல் வாழ்த்துக்கள்


உள்ளம் மகிழ
இல்லம் நிறைய
பொங்கலோ பொங்கல்!


உழுது விதைத்தால்
அறுவடை நிச்சயம்
எழுந்து முயற்சித்தால்
வெற்றி நிச்சயம்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்


உலகில் உயர்ந்த சாதி என்று
மார்தட்டி சொல்லும் தகுதி
படைத்த ஒரே சாதி உழுது
விதைத்து பசியாற்றும்
விவசாய சாதி தான்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


நோய்க்கு மருந்தளித்து உயிர்
காக்கும் மருத்துவர் கடவுள்
என்றால் அந்த மருத்துவருக்கே
உணவளித்து உயிர் காக்கும்
உழவன் மிகமிக உயர்ந்த கடவுள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


உலக உயிர்களுக்கு உணவூட்டி
உயிரூட்டும் உழைப்பும் உழவும்
உழவனும் உயர்ந்தவர்கள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


உழவும் உழவனும் இல்லை
என்றால் உடலுக்கு உணர்வில்லை
உயிருக்கு உடலில்லை இதை
உணராதோர் மனிதனே இல்லை
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


மங்கலம் எங்கும் தங்கிட
நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட
அன்னைத் தமிழ் மணம் பரப்பி
வாழ்ந்திட வாழ்த்துகிறோம்


தைமகள் வந்தாள் இளமையோடு
தாய்மண் காக்க வந்திட்டாள் துள்ளலோடு
மனமது நிறையும் பொன்னாள்
புன்னகை விரியும் நன்னாள்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்


தரணியெங்கும் வளம் தழைக்கட்டும்
கழனியெங்கும் நெல்மணிகள் நிறையட்டும்
உள்ளமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


தைத்திருநாள் பிறந்தது
புது வாழ்வு மலர்ந்தது
தரணியெங்கும் உழவு சிறந்தது
தமிழரின் மனங்குளிர்ந்தது
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


பொங்கல் திருநாள்
அனைவருக்கும் வளத்தை
தரட்டும் வியர்வை சிந்தி
உழைக்கும் நமது விவசாய
பெருங்குடி மக்களின் முகத்தில்
மகிழ்ச்சியை தரட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் பாசமுடன்
புத்துணர்வு பொங்க
வாழ்த்தி வரவேற்போம்
தைத்திருநாளை

மேலும் கவிதைகள் உங்களுக்காக

தமிழில் நிலா கவிதை

தமிழில் சேலை மேற்கோள்கள்

தமிழ் கவிதையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ravi Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *